Friday, October 11, 2019

எங்க வீட்டு கொலு



எங்க வீட்டுல  நான் சிறுவனாக இருக்கும்  போது நவராத்திரி காலங்களில் கொலு என் அம்மா வைப்பது  இல்லை. எங்க அம்மா  ஆசிரியை அதனால்  வேலைக்கும்  பொழுதுக்கும் சரியாய் இருக்கும், ரெண்டாவது எனக்கு உடன் பிறந்த சகோதரிகள் இல்லை தம்பி மட்டுமே . ஆனால் என் அத்தை வீட்டில் வைப்பார்கள் அதனால்  நாங்கள் எல்லாம் தவறாம அத்தை வீட்டு கொலுவில் பங்கேற்போம் .எங்க அம்மாவுக்கு  கொலு என்றால் இஷ்டம் ,ஆனால் வைக்க முடியல என்பார்கள் .

திருமணம் ஆனவுடன் என் மனைவி அவள் வீட்டில் வைக்கும் கொலு பற்றி சொன்னாள், நான் சொன்னேன் நமக்கு ஒரு மகள் வந்தவுடன் வைக்கலாம் ,
மகளும் வந்தாள் கொலுவும் வைக்க ஆரம்பித்தோம். முதலில் 3 படிகளில் ஆரம்பித்து 5 படிகளில் வைத்து இருக்கோம்.இப்போ  கடைசி 3 நாள்களுக்கு மட்டும் வைக்கிறோம் .இனி வரும்  காலங்களில் 9 நாட்களுக்கும்  வைக்கலாம் என்ன இருக்கோம் .

2015 கொலு 

2015 முதல் சிறு அளவில் ஆரம்பித்தோம் .







2016 கொலு 

இந்த ஆண்டு கொலு படி வாங்கினோம்( 7 படி ). அப்புறம்  புது பொம்மைகளும் .

 அண்ணாமலையார்  உண்ணாமுலையாலும் 
தசாவதாரம் 


சாரதாம்பாள்



                                                                          
  கிருஷ்ணர் 


லட்சுமி ஹயக்ரீவர்

கலைமகள் 

2017 கொலு (புதிய பொம்மைகளுடன் )


இராமானுஜர் 

குருவாயூரப்பன் 

நடராஜர் ,சிவகாமி 

அனுமன்

உலகளந்த பெருமாள்
 
2018 கொலு(புதிய பொம்மைகளுடன்)

பாலாம்பிகை 

தன்வந்திரி 





கொலு 2019

இதுவரை வாடகை வீட்டில் இருந்தோம் இந்த ஆண்டு தொடக்கத்தில் புதிய வீடு கட்டி குடி வந்தோம் (ஏப்ரல் 22ம் தேதி ). எனவே  இந்த  ஆண்டு முதல் சொந்த வீட்டில் கொலு .








என் மகள் வைத்த கொலு




 வராகி 

இந்த ஆண்டுவரை ஐந்து படி  தான்  வைத்தோம் அடுத்த ஆண்டு முதல் ஏழு படி வைக்கலாம் என நினைக்கிறோம்  பார்க்கலாம் அடுத்த ஆண்டு (2020)நன்றி வணக்கம் .🙏🙏🙏🙏🙏🙏

4 comments:

துளசி கோபால் said...

படிப்படியாக கொலுவின் வளர்ச்சி அருமை!

சொந்த வீடு ..... நமக்குள்ள பெருங்கனவு இல்லையோ! இனிய வாழ்த்துகளுடன், எங்கள் அன்பும் ஆசிகளும் !

நல்லா இருங்க !

செந்தில்பிரசாத் said...

நன்றி அம்மா எப்போதும் உங்கள் ஆசியுடன்

மாதேவி said...

அழகிய கொலு. சொந்தவீட்டில் சிறப்புடன் சகல நலமும்பெற்று வாழ அம்பாள் அருள் கிடைக்கட்டும்.

செந்தில்பிரசாத் said...

நன்றி அம்மா