Wednesday, September 25, 2019

அத்திவரதருடன் ஒரு ஆனந்த அனுவபம் -2

அத்திவரதருடன் ஒரு ஆனந்த  அனுவபம் -2

கல்லூரி பருவம்  முடிந்தவுடன்   மேற் படிப்பு மற்றும் ,வேலை தேடி வேற ஊர் ,வேற மாநிலம் சென்றேன். வேலை ,திருமணம் ,குழந்தை, சொந்த வீடு   என அடுத்த அடுத்த நிலைக்கு சென்றேன் ஆனாலும்  இப்பொழுதும் என்  நண்பனுக்கும்  உண்டான நட்பு  அந்த ஊர்கும் உண்டான பந்தம் இன்றும்  தொடர்கிறது .எப்போதெல்லாம் அங்க செல்ல முடியுதோ அப்போவெல்லாம்  கோவிலுக்கும் என் நண்பன் வீட்டுக்கும் கண்டிப்பாக  செல்வேன் . அப்போவெல்லாம் அத்திவரதரை  பற்றியும் அந்த குளத்தங்கரை உரையாடலும் எப்போதும் நடக்கும் .மற்ற நாள்களில்  அதை  பற்றிய  நினைவு ஓடும் .

சென்ற வருடம்  டிசம்பர்  மாதம்  You Tube ல்  ஒரு வீடியோ  வந்தது  அதில் அடுத்த ஆண்டு(2019)  ஜூலை  மாதம்  ஆதிவரதர்  எடுத்தருள  போகிறார்  என்ற  தகவல் வந்தது . எனக்கு ஒரே  ஆனந்தம் . என்  நண்பனிடம்  கேட்டு உறுதி செய்தேன் . அத்திவரதரை  பார்க்க வேண்டும் என்ற  ஆசை .

நாள்கள் செல்ல  எப்போது அத்தி வரதர் வருவார் என்ற ஆர்வம் அதிகரித்தது .பத்திரிகை , முகநூல் ,தொலைக்காட்சி  என  அனைத்திலும் செய்தி  வர ஆரம்பித்தது .கோவில் நிர்வாகம் சார்பாக  அறிக்கை வெளியிடப்பட்டது  ஜூலை 1 ம் தேதி  முதல்  ஆகஸ்ட்  17 வரை தரிசனம்  தருவார் என அறிவிக்கப்பட்டது .

இணையத்தில் தேடியபோது பழைய படம் கிடைத்தது .கருப்பு  வெள்ளை படத்திலும் அத்திவரதர்  மிக அழகாக  தெரிந்தார் எனக்கு .




சரி ..அவரை  கண்டிப்பா போய் பாக்கணும் என்று  நினைத்தேன்    என் மனைவிடம் சொன்னேன்.சரி  என்றாள் ஒரு திட்டம் (Plan) போடுங்க  என்றாள் .
என் அம்மாவும் கண்டிப்பா போய் பார்க்கணும்பா  என்றார்கள் .சரி  எப்போ போகலாம்னு பார்த்தால் அலுவலகம் , இடையில்  உறவினர் திருமணம் வேறு எப்ப்டி பாக்கபோறோம் ஒரு கவலை .......... சரி  ஆண்டவன்  விட வழி  என  இருந்தேன் ..

                                                                                                                                     (தொடரும் -2)

Tuesday, September 24, 2019

அத்திவரதருடன் ஒரு ஆனந்த அனுவபம் -1

அத்திவரதருடன் ஒரு ஆனந்த  அனுவபம் -1

அத்திவரதருடன் அறிமுகம்

 அத்திவரதருடன் அறிமுகம் எனது கல்லூரி பருவத்தில்(1999-2002)  இருந்து  துவக்கியது .காஞ்சிபுரத்தில் ஒரு புகழ்  பெற்ற  கல்லூரி படிக்கும் பொழுது எனது நண்பன்  செந்தில் ( என் பெயரும்    செந்தில்தான் ) மூலம்  அறிமுகம்  ஆனார் . நான்  விடுதியில் தங்கி படித்தேன் . ஹாஸ்டல்  சாப்பாடு நன்றாக  இருக்கும்  ஆனாலும்  வெளி  சாப்பாடு  வேணும் போல இருக்கும் . ஒரு நாள் என்  நண்பன் தக்காளி சாப்பாடு கொண்டுவந்தான்  எங்களுக்கும் கொடுத்தான்  ஆஹா  அருமை ..அதனால்  அவன் அம்மா( எனக்கும்  அம்மா  மாதிரி தான் )  தினதோரும்  எனக்கும்  சாப்பாடு கொடுத்து அனுப்புவார்கள். என்னை அவர்கள்  வீட்டில் ஒருவனாக நினைத்தார்கள் இப்போவரை .




ஒருநாள் அவன்  வீட்டுக்கு சென்றேன் அப்போ அவன் என்னை வரதராஜ  பெருமாள்  கோவிலுக்கு  அழைத்து  சென்றான் .கோவிலை  சுத்தி  காமிச்சிச்சான் .வியந்து போனேன் . முதல் முறை இந்த  கோவிலிலுக்கு  வந்தேனல்லவா . அந்த  ஆச்சரியம்   போவதற்குள்  அடுத்த ஆச்சரியம்   சொன்னான் . ஒரு குளத்தை  காட்டி இதற்குள்  சாமி  இருக்கிறார்  என்றான் . நான்  என்ன சாமி   என்றேன்? அதற்கு  "அத்தி வரதர்"என்றான்.அப்போதுதான் அந்த பேரை  கேக்குறேன் .அந்த குளத்தில்  இருக்குற  மண்டபத்தின் அடி யில்  தண்ணீரில் இருக்கிறார்  40 வருடத்துக்கு ஒருமுறை அந்த குளத்து நீரை வெளியேத்தி விட்டு  சாமியை எடுப்பார்கள்  கொஞ்ச நாள் கழிச்சு  மீண்டும்  உள்ளே வச்சுருவாங்க னு சொன்னான் எனக்கு  ஒரே  ஆச்சிரியம்.. அப்போ வர சாமிக்கு ஏதும் ஆகாதனு கேட்டேன் . அதுக்கு  சொன்னான்  அது  சாமி  , சாமிக்கு ஏதும் ஆகாது னு சொன்னான் .



மேலும் அத்திவரதர் கதை, அத்திவரதர் அத்தி மரத்தால்  ஆனவர்  என்றான் எனக்கு ஆச்சரியம் அதிகம் ஆனது .எப்போ கடைசி யாக  எடுத்தார்கள்  என்றேன்  1979 என்றான் , நான்  சொன்னேன் நீயும் நானும் அப்போ பிறக்கவில்லயே( நான்  பிறந்தது 1982 என்  நண்பன் பிறந்தது 1981) , அம்மா, அப்பா  சொன்னாங்க  அவர்களும் தினந்தோறும் சென்று  தரிசித்தார்கள்  என்றான் .அடுத்து 2019 தான்  வெளியே எடுப்பார்கள்  என்றான் .நான்  சொன்னேன்  அப்போ நாம எங்க இருப்போம் ணு  தெரியல.பார்க்கலாம்  என்கிறோம் இருவரும் .

                                                                                                                                       (தொடரும் -1)





அனைவருக்கும் வணக்கம்

அனைவருக்கும்  வணக்கம்

  இது  என்னுடைய  முதல்  பதிவு . என் பதிவை  அத்தி வரதருடன்  ஆரம்பிக்கிறேன் .தவறுகள்  இருந்தால்  மன்னிக்கவும் .

நன்றி  என் பெற்றோர்க்கும் , மனைவிக்கும் , என் சகோதரருக்கும்  மற்றும்  என் குடும்பத்தார்கும்

நன்றி  என்னை  எழுத  தூண்டிய துளசி  அம்மா (துளசி கோபால்)