Tuesday, December 31, 2019

புத்தாண்டு வாழ்த்துகள் 2020




அனைவருக்கும் எங்கள்  இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2020

உங்கள் 

செந்தில்பிரசாத் சந்திரசேகரன் 
சக்திசெல்வி செந்தில்பிரசாத்
சௌமிய பைரவி செந்தில்பிரசாத்

Monday, December 16, 2019

அத்திவரதருடன் ஒரு ஆனந்த அனுவபம் -7

சென்னை எங்களை  மழையுடன்  வரவேற்றது .தம்பி வீடு வந்துடன் நீண்ட நாள் கழிச்சு பார்க்கிறோம் அல்லவா விசாரிப்புகள் , கதைகள்  எல்லாம் உரையாடிவிட்டு மாலை  வெளியில் கிளம்புவதாக ஒரு திட்டம் மகாபலிபுரம் போய்வரலாம் என முன்னாடி  முடிவெடுத்தோம் மாலை ஒரு 3:30 க்கு போகலாம் என திட்டம்.என் தம்பி வண்டி  முன்கூட்டியே பதிவு செய்துவைத்தான் . 

நாங்களும்  ஒரு 3 மணிக்கு கிளம்பி தயாராக இருந்தோம் . அப்போது  வண்டி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதாக குறுச்செய்தி  வந்தது சரி  வேறு வண்டிக்கு  பதிவு செய்யலாம்  என நானும் முயற்சி  செய்தோம்.அன்று ஞாயிறு வண்டி கிடைக்கவேயில்லை.மறுநாளும்  வண்டிக்குபதிவுபண்ணிவச்சுஇருந்தோம் .ஐயோஅதுவும்இப்படி ஆகிவிட்டால்  என்ன பண்றது ? சரி அப்படி ஆகிவிட்டால் நாங்கள் இருவரும் பேருந்தில் போகலாம் என முடிவானது .எப்படியாவது பார்த்துவிடலாம் என்ற  எண்ணம்.

என்  நண்பனிடம் சொன்னேன்  கிளம்பும்போது  call பண்ண சொன்னான்.அவனுக்கு உள்ளுர் வாகன அட்டை இருப்பதாகயும் ,அது இருந்தால்தான் ஊருக்கு உள்ளேவரமுடியும்  என சொன்னான் .விவரம் புரியாமல் சரி என்றேன்.கூட்டம் எப்படி இருக்கு என்று கேட்டேன்  ஞாயிறு அல்லவா கூட்டம் இருக்குது  என்றான் .நாங்களும் மகாபலிபுரம்  போக முடியாததால்  வெளியே  போக முடிவெடுத்தோம் . பக்கத்தில்  உள்ள உணவகத்திற்கு சென்றுவந்தோம்.

மறுநாள் விடிந்தது  நாங்களும் தயார் ஆனோம் .காலையில்  செய்தி பார்க்கும் போது கூட்டம் அதிகமாக  இருத்தது .சரி நாம்தான் VIP  பாஸ் வாதி இருக்கோம் அப்பறம் என்ன  பிரச்சனை  என நினைத்தோம் .காஞ்சிபுரம் போக வண்டிக்கு  2மணிக்கு  சொல்லி இருந்தோம் ,1:45 வர குறுந்செய்தி வரவில்லை .வேற  ஒரு வண்டி  பதிவு செய்தோம் .எல்லோரும் தயாராக இருதோம் பாரம்பரிய  ஆடைகளுடன் ( அவரை பார்க்க அப்படித்தான்  வரணும் என டிக்கெட்ல அப்படித்தான் போட்டு இருந்தது ). 2:10 வண்டி வந்தது .

காஞ்சிபுரம் நோக்கி  பயணமானோம் .போகும் வழி  எல்லாம் அவரை பற்றிய தகவல் தான் . என்  பழைய  நினைவுகளுடன்  பயணமானேன் .என் நண்பனுக்கு போன்  செய்து  கிளம்பிய தகவலை தெரிய படுத்தினேன் . வாலாஜாபாத் வந்தவுடன் மீண்டும் கூப்பிட சொன்னான் .வாலாஜாபாத் வந்தவுடன் அவனே அழைத்தான்.வாலாஜாபாத் வழியாக  நேர காஞ்சிபுரம் வரமுடியாது .ஒரே டிராபிக் ஜாம்  ஓரிக்கை  வழியாக  வா  என்றான் . எனக்கு அந்த வழி தெரியாதே  என்றேன்  டிரைவர் இடம்  வழி  சொன்னான்.ஓரிக்கை என்றவுடன்  எனக்கு என் குருநாதர்  மகாபெரியவர்  நினைவு  வந்தது .ஆம்  மகாபெரியவர் மணிமண்டபம்  அங்கு  உள்ளது.





மகாபெரியவர் மணிமண்டபம்



மகாபெரியவர் மணிமண்டபம்


நான் படிக்கும் போது அந்த மணிமண்டபம்  கட்ட ஆரம்பிக்கவில்லை இல்லை என்றால் போய்  அவசியம் பார்த்து இருப்பேன் .வண்டி டிரைவர் அவருக்கு தெரிந்த மற்றும் தெரியாத வழிகளில் ( google மேப் உதவியுடன் )கொண்டு போய்  சேர்த்தார் . ஓரிக்கையில்  என் நண்பனும் வரவேற்றான் .எனக்கு ஒரே  சந்தோஷம்.நீண்ட  நாள்  கழித்து  என்  நண்பனையும் , காஞ்சிபுரத்தையும் பார்த்தோம்  என்ற மகிழ்ச்சி .


நானும் என்  நண்பனும்

அவன் நான்  முன்னாடி போகிறேன்  நீங்கள் பின்னாடி  வாருங்கள் என பல   சந்துகள்  வழியாக  அழைத்து சென்றான் .ஒரு 10 நிமிடம்  பிறகு அவன் வீட்டுக்கு அருகில்  சென்று அடைந்தோம் .அதுவே சிறிய  தெரு  அந்த தெரு முதுவதும்  கூட்டம் . அந்த தெருவில் நண்பனின்  உறவினர்  வீடு  இருக்கிறது .அங்கு சென்று சிறிது  நேரம் உரை யாடி விட்டு , சிரம பரிகாரம்  செய்துவிட்டு கோவிலுக்கு கிளம்ப தயார் ஆனோம்
அவன் வீட்டுக்கு வர சொன்னான் .அவன் வீட்டில் ஒரு சிறு விழா . கண்டிப்பா வர சொன்னான் கோவிலுக்கு  போய்ட்டு வரோம் என்றேன்.இந்த டிக்கெட் கு எங்க பொய் நிக்கணும் என்றேன் .அவன் எந்த தெரு கடைசியில்தான் என்றான் .சரி என சொல்லி வந்த வண்டியை அவன் உறவினர் வீட்டுக்கு அருகில் நிறுத்திவிட்டு,அவனிடம் விடை பெற்று கோவிலுக்கு மெதுவாக நடக்க தொடங்கினோம். ஒரு 20 அடித்தான் நகர்த்துப்போம். கூட்டம் தென் பட்டது .

இதுதான் வரிசையா? என்ற சந்தேகம்  வேற சரி இங்குதான் நிற்கவேண்டும் என்ற அறிவிப்பு பலகை தெரிந்தது .நாங்கள்  போகும் போது 3.30மணிக்கு , அருகில் இருத்தவரை கேட்டேன் நீங்கள்  எப்போ இருத்து நிக்கிறிங்க ? அவர் சொன்னார் நாங்கள் 10 மணி லிருந்து  நிக்கிறோம் ( அம்மாடி).காலைல இருத்து கத்துக்கிட்டு இருக்கோம் VIP தரிசனம் தான் போலீஸ் உள்ளே அனுமதிக்க விடலை .வழியை  திறந்து விட வில்லை


 
பக்தர் கூட்டமும் மற்றும் அறிவிப்பு பலகை


சரி நாமும் போய்  நிற்போம் என  முடிவெடுத்து  நின்றால்  போலீஸ்  எங்கு நிக்காதீங்க போக இன்னக்கி யாருக்கும்  தரிசனம் கிடையாது .தரிசனம்  முடிந்துவிட்டது தயவுசெய்து  போங்க .ஆனாலும்  ஒரு கூட்டம் சாமீ பார்த்துட்டு வந்துடோம் என சொல்லிக்கொண்டு  போனார்கள் .எங்களுக்கா சரியான கடுப்பு .அது என்ன அவர்களை  மட்டும் விடுறிங்க  என  ஏகப்பட்ட கேள்வி ஒரே  கூச்சல் ,ஒரு நெருக்கம்  நாங்கள்  இருந்த பகுதியில் முழுவதும் வயதானவர்கள் ,எல்லோருக்கும்  ஒரே வருத்தம். போலீஸ் இப்படி பண்ணுறாங்களே என்ற குரல்  எங்கும் ஓங்கி ஒலித்தது  




நானும்  என் மகளும்

ஒரு வழியாக  தடுப்பை  தள்ளிவிடுதான் உள்ளே போனோம் .ஒரே நெரிசல் அம்மா அப்பா மனைவி என் மகள்  என  அத்தனை பேரும் நெரிசலை சமாளித்து மீண்டும் ஒரு வரிசையில் நின்றோம் . என்ன அந்த வரிசை  ஒரு அரை கிலோ மீட்டருக்கு இருந்தது .அப்பாடா  வரிசையில் நின்றோம்  என்பது தவிர வரிசை  நகரவே இல்லை .எப்போடா வரிசை நகரும்  போய்  சாமியை பார்க்கலாம் என்றால் முன்னாடியும் பின்னாடியும்  கூட்டம் சேர்த்தே தவிர குறைந்த பாடு இல்லை

அப்போது  ஒரு அதிசயம்  நடந்தது ஒரு பெரிய கரு மேக கூட்டம்  கோவிலை நோக்கி வந்தது .என்னக்கு ஒரு பெரிய கருடன்  பறந்து வந்ததை போல இருந்தது . எல்லோரும் அதைத்தான் பார்த்து கொண்டு இருந்தோம்.ஒரு மெல்லிய காற்று வீசியது . உடனே தட தட வென மழை பெய்ய தொடங்கியது. அந்த மழை பொழிவு அவ்வளவு  அழகு  

ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
    
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேரி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
    
பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
    
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
    
மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்
 



உண்மையிலே ஆண்டாள் பாடி மழைவந்து விட்டதாகவே நினைக்கின்றேன். ஏனெனில் ஆடிப்பூர விழாவும்  அப்போதுதான் முடிந்து இருந்தது அந்த மழைப்பொழிவு மின்னலானது பெருமாள்  கையில்  உள்ள சக்கரம்  போன்றும் ,இடியானது  வலம் புரி சங்கு  முழங்குவது போன்றும் , மழையானது பரந்தாமன்  விடும் அம்பு போன்றும்  இருந்தது .

மழை பெய்தபோது இந்த பாசுரம் என்னக்கு தெரியவில்லை .மழைக்கு ஒரு பாசுரம் என தேடிய போதுதான் இந்த பாசுரம் கிடைத்தது.என்ன ஒரு பொருத்தமான பாசுரம் . அன்று எங்களுக்கு ஆண்டாள் தான் இந்த மழையை அருளி இருக்கிறார் .அத்திவரதர் உற்சவம் ஆரம்பிக்கும் பொது தமிழ்நாட்டில்  பெரும்பாலான இடங்களில் கடும் வறட்சி நிலவியது ஆனால் முடிந்த பின்பு கடும் வறட்சி மறைந்தது என்பது உண்மை . அந்த கோதைக்கு நன்றி.


மழையை கண்டவுடன் பலபேர்  ஒதுங்க இடம் தேடினார்கள் நாங்களும் தான்.ஆனால் நங்கள் முன்னாடி போய் விட்டொம் ஆனாலும் நெரிசல், பேசாம வீட்டுக்கு போய்விடலாம் என என்னினேன் .என் மனைவிடம் மெல்லிய குரலில்  சொன்னேன் .ஆனால் அவள் ஏதும் சொல்லவில்லை .என் மகளை வைத்து இருந்தாள் பாவம் அவளும் கஷ்டப்படுகிறாள் .ரெண்டு பக்கம்  அவளை அழுத்துகிறார்கள் அவளை பார்க்க கஷ்டமாக இருக்கிறது. வைத்து இருந்த குடையும் அடிக்கிற காத்துக்கு பறக்கிறது .என் அம்மா அப்பாவையும் பார்க்க கஷ்டமாக இருக்கிறது .அம்மா கிட்ட சொல்லலாம் என முன்னாடி பார்த்தால் அம்மாவும் அப்பாவும் முன்னாடி போய் கொண்டு இருக்கிறாங்க எங்களை வேகமா வாங்க என்கிறாங்க .

அவர்கள் கொடுத்த உத்வேகத்தில் நாங்களும் ஒரு கும்பலை தள்ளி கொண்டு முன்னேறி போனோம் .அதில் ஒரு போலீஸ் "பிள்ளையை  லேடீஸ் கிட்ட குடுத்துவிட்டு நீ பாட்டுக்கு போய்கிட்டு இருக்கு வாங்கு அவங்ககிட்ட  இருத்து வாங்கு" என்றார் .நானும் வாங்கினேன் ரொம்ப sorry என்றேன். என் மகளிடம்சரி அப்பா என்றாள் .ஒரு வழியாக  வரிசை இருத்த பகுதிக்கு வந்தோம் .அப்போதான்  மூச்சே விட முடிந்தது.எங்கள் உடை முழுவதும் நனைந்து இருத்தது .அப்போதுதான் தெரிந்தது இனிமேல்தான் வரிசை ஆரம்பம் ..

(தொடரும் -7)