Friday, October 4, 2019

அத்திவரதருடன் ஒரு ஆனந்த அனுவபம் -3

அத்தி வரதர் முதல் தரிசனம்

அத்திவரதரை  தரிசனம் கிடைக்க   நாள் நெருங்கி  கொண்டு இருத்தது  அதற்குள் மனதில்  ஒரு  நெருடல்  உண்மையிலே  அங்கு  சாமி இருக்கா ? இல்லையா ? அப்படியே  இருந்தாலும் சாமிக்கு பாதிப்பு இருக்கும்   என தோன்றியது. ஒருநாள் தொலைக்காட்சியில்  அத்திவரதரை வெளியே  எடுக்கும் முதல் கட்டமாக அனந்த சரஸ் குளத்தில்  நீர் வெளியேற்றும் பணி தொடங்கியதாக  செய்திகள் வந்தன .என் நண்பன் சொன்னது நினைவுக்கு வந்தது . எனக்கு ஆர்வம் மேலிட்டது .


குளத்து  நீர் வெளியேறுவதற்கு முன்


குளத்து  நீரை வெளியேறுவதற்கு முன்னேற்பாடுகள் 




குளத்து  நீர்  வெளியேற்றிய  பின்


அத்திவரதர்  இருக்கும்  இடம்



சரி ..அவரை  கண்டிப்பாக தரிசனம்  செய்யவேண்டும்  என உறுதி கொண்டேன் .வெளியே எடுக்கும் நாளுக்காக காத்துஇருந்தேன்.

ஜூன் 26 இரவு  முகநூலில்(Facebook) ஒரு தகவல் .அன்று இரவு அத்திவரதரை மேல கொண்டுவர போவதாக ஒரு தகவல் .அந்த தகவலை பார்த்து விட்டு இது வதந்தி  என நினைத்து விட்டு விட்டேன் .இதற்கு முன் பல வதந்திகள் வந்து இருக்கின்றன . இதுவும் அதுபோல் தான்  என நினைத்துவிட்டேன் .
நம் ஊரில் தீ யை  விட வேகமாக பரவுவது வதந்தி தானே ....

மறுநாள் காலை 5மணிக்கு க்கு   முகநூலை (facebook) க்கை திறக்கும் போது (தினம்தோறும் மற்ற நூல்களை திறக்கிறோமோ இல்லையோ முகநூலை கண்டிப்பாக திறக்கிறோம் 😀😀)...அப்போது  அந்த புகைப்படம்  என்னை வியப்பில் ஆழ்த்தியது .இத்தனை நாள் இல்லை இல்லை இத்தனை வருட காத்திருந்த நிகழ்வு நடத்தே விட்டது என அந்த படம் உணர்த்தியது ஆம் அத்திவரதர் ... தரிசனம் ..ஒரு நிமிடம் என் கண்கள் அகலவேஇல்லை .



அந்த படம் -1



அந்த படம்-2


அன்றைய காலை  செய்திகளில்  (செய்தி தாள் ,தொல்லைக்காட்சி  .. மன்னிக்கவும் தொலைக்காட்சி களில் மற்றும் இணையம்)  முழுவதும்  அத்தி வரதர்  தான் ஆக்கிரமிப்பு  செய்திருந்தார் .மேலும்  தகவல்கள்  பல  வரத்தொடங்கின .. அதில் ஒன்று அவர் வெறும் தரையில் சயனத்தில் இருந்தார் ...முன்னர் வந்த தகவல் படி அவர் வெள்ளி பெட்டி சயனத்தில் இருப்பார் எனவந்தது .என்னது ஆண்டவன் வெறும் தரையிலா  சயனத்தில் இருந்தார் ? அதுவும் 40 வருடம் ..

அத்தி வரதர்  சயனத்தில்  இருந்த மண்டபம் (நீராழி )








அடுத்த தகவல் அவரை சுத்தி 14 நாகசிலைகள்  இருந்தன அதுவும் தலை முதல் திருவடி வரை அவர் பாதுகாப்புக்கு ..பாம்பணையில் பள்ளிக்கொண்ட பரந்தாமன் ...அதுவும் அவருடன் 40 ஆண்டுகள் ,உண்மையிலே ஆச்சரியம் ..

நாக சிலைகளில் ஒன்று 

அவர் திருமேனி  முழுவதும்  பாசி படிந்திருந்தது, பச்சை மா மலை போல் மேனி உடையவன்  அல்லவா .ஆனால் அவர் மேனி யிலோ  பள்ளி கொண்ட இடத்திலோ சிறு  துர்நாற்றமோ வர வில்லையாம்  என்ன ஒரு அதிசயம் .

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே

என சூடிக்கொடுத்த சுடர்கொடியாள்  ஆண்டாள்  நாச்சியார் திருமொழியில் ஆழி வெண்  சங்கிடம் கேட்பது போல் நமக்கும் அந்த நாகங்களிடம் கேக்கவேண்டும்போல தோன்றுகிறது .

அந்த பச்சையத்தை பிரசாதமாக கைகர்யம் செய்தவர்களுக்கு வினியோகம் செய்ய பட்டதாம் .எத்தனை பேறு பெற்றவர்கள் அவர்கள் .மேலும் 40 வருடங்களுக்கு முன் பெருமாளுக்கு சாத்திய பட்டடை , பூணூல் (வெள்ளி ) கொஞ்சம் செல்லரித்து இருந்ததாம் ஆனால் அவர் மார்பில் லட்சுமி பதக்கம் எந்த சேதாரம் இல்லாமல் இருந்ததாம் ..

அவர் திருமேனி




பிரசாதம் 
 

வெளியே எழுந்தருள பண்ணி  அவரை வசந்த மண்டபத்தில் வைக்க 3 மணி நேரம் ஆனதாம் 

வசந்த மண்டபம்


இதன்பிறகு ஒரு முடிவுக்கு வந்தேன் அத்தி வரதர்  உண்மை .என் 20 ஆண்டு கால சந்தேகம் தீர்ந்தது . ஆம்  சாமி உண்மையிலே இருந்தது குளத்துக்கு அடியில் .....
(தொடரும் -3)


No comments: