அத்திவரதர் உடன் ஒரு பிணைப்பு
அந்த நாள் முழுவதும் தொலைக்காட்சிகளில் அத்திவரதர் செய்திதான் தலைப்பு செய்தி .என் மனைவியும் அந்த காட்சியை தொலைக்காட்சில் பார்த்தேன் என்றாள் . அத்திவரதரை பார்க்க போலாமா ? என்று கேட்டாள்.
சரி போலாம் என்றேன். ஆனால் அவர் நமக்கு appointment குடுக்கணுமே என்றேன் .என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அவரை பார்க்க வேண்டும் என எண்ணம் .அவர்களும் போன தடவை இதை பத்தி தெரியல இந்த அளவு தகவல் தொடர்பும் இல்லை அப்படியே தெரிந்தாலும் போக வாய்ப்பே இல்லை . அப்போது இருந்த சூழல் அப்படி மேலும் இருவருக்கும் திருமணமாகவில்லை .😀( அம்மா அப்பா திருமணம் 1980ல் ).அதனால் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருவருக்கும் .எங்களுக்கு 40 வருஷம் கழிச்சு இருப்பமோ இல்லையோ தெரியல அதனால கண்டிப்பா பாக்கணும் இப்போது உடம்புல வலு இருக்குறது அதனால இப்பவே பார்த்து விட வேண்டும்.
அன்று மாலை என் மகளும்(அவளுக்கு வயது ஐந்து ) இதை கவனித்து இருப்பாள் போல , நான் தொலைக்காட்சி யில் பார்த்துக்கொண்டு இருந் தேன் ( மீண்டும் மீண்டும் )அவளும் அவள் பங்கிற்கு யாருப்பா அது உடம்பு சரி இல்லையா ? ஏன் எல்லாரும் அவரை அப்படி தூக்கிகிட்டு போறாங்க என்றாள் அது சாமி டா .. என்றேன் .ஓ சாமிக்கு உடம்பு சரி இல்லையோ ? இல்லை என்றேன் நான் .சரி என்னதான் அப்பா ஆச்சு சாமிக்கு என்றாள் . அவளுக்கு சொன்னேன் ஒன்றும் ஆகவில்லை ,அந்த சாமி பெயர் அத்திவரதர் .
அவளும் முதல்முறையாக அந்த பெயரை கேட்டிருப்பாள்.அவளுக்கும் ஆச்சரியம் ..அவளுக்கும் கதையை சொன்னேன் ஓகோ அப்படியா என அவள் மொழியில் சொன்னாள் . அவளும் நிறைய கேள்வி கேட்டாள் .நானும் பதில் சொன்னேன் அவள் கேக்கும் கேள்விக்கெல்லாம் .அவள் கேட்ட கேள்விகள் எல்லாம் நான் என் நண்பனிடம் 20 ஆண்டுகளுக்கு முன் கேட்ட அதே கேள்விகள் ,இதுவெல்லாம் யார் அவளுக்கு சொன்னது ? யார் கேக்க சொன்னது ,எல்லாம் ஒரு பிணைப்பு தான் என நினைத்தேன் .
சரி எப்படி போய் பார்க்கலாம் என நினைக்கும் போது இணைய வழி முன்பதிவு (online)செய்யலாம் என அறிவித்து இருந்தது தமிழக அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் ஒரு நாளைக்கு 500 பேர்தான் அனுமதிக்க படுவதாக அறிக்கை வந்தது .அதுவும் காலையில் 250 மாலையில் 250 என அறிவித்து இருந்தார்கள் .அப்பறம் 50 ரூபாய்க்கு மற்றும் இலவச தரிசனம் என அறிவிக்கப்பட்டுயிருந்தது சரி எப்படியும் பார்க்கலாம் என் முடிவு கொண்டேன்.இரு நாள்களாக தொலைக்காட்சி , முகநூல் என அவர் பேசுச்சுதான் .(எங்கள் வீடு உட்பட )
சரி அவர் கதையும் கொஞ்சம் கேட்க வாருங்கள் (இந்த கதைகள் /வரலாறு எல்லாம் இணையம்,புத்தகத்தில் படித்தது .)
கதை -1
புராண கதை:ஸ்ரீரங்கம், திருப்பதி ஆகியவற்றிற்கெல்லாம் முந்தைய மிகப் பழமையான வரலாறு கொண்டது காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் வரலாறு.
ஆதியில் படைப்பு தொழில் மேற்கொண்ட பிரம்ம தேவன் தனது காரியங்கள் செவ்வனே நடைப்பெற ஒரு யாகம் மேற்கொண்டார். யாகத்திற்கு சரஸ்வதி தேவியை அழைக்காததால், மனைவி இல்லாமல் யாகத்தை பூர்த்தி செய்ய முடியாது என்பதால் காயத்திரி, சாவித்திரியை வைத்து யாகத்தை முடிக்க எண்ணினார். தன்னை அழைக்காமல் யாகம் செய்த பிரம்மர் தேவர் மீது கோபம் கொண்ட சரஸ்வதி தேவி, பிரம்மனின் யாகத்தை அழிக்க வேகவதி ஆறாக உருமாறி யாகத்தை நோக்கி வந்தாள்.அந்த ஆறு என்றும் ஓடுவதாக சொல்லுகிறீர்கள் ( அப்படியா ?)
பிரம்ம தேவனின் யாகத்தை காப்பாற்றும் பொருட்டு பெருமாள், சயனம் கொண்டு நதியை தடுத்து பிரம்மனின் யாகத்தை காப்பாற்றினார். சித்திரை மாதம், திருவோண நட்சத்திரத்தில், பிரம்மன், தேவர்களுக்கு புண்ணியகோடி கோலத்தில் அதாவது சங்கு, சக்கரம், கதை தாங்கிய கோலத்தில் பெருமாள் காட்சி அளித்ததார். அப்படி புண்ணியகோடி கோலத்தில் காட்சி அளித்த வரதராஜ பெருமாளை பிரம்ம தேவர் அத்தி மரத்தில் வடித்து வழிபட்டார்.
இப்படித்தான் அத்தி வரதர்
மண்ணுலகில் எழுந்தருளினார். பிரம்மதேவரால் உருவான அத்திமர வரதராஜரை தேவலோக
யானையான ஐராவதம் தனது முதுகில் சுமந்தது. பின்னர் ஐராவதம் சிறு குன்றாக
உருமாறி அத்தி (யானை)கிரி, வேழமலை என்று பெயர் பெற்றது. யாகத்தை காப்பாற்றிய திருமாளிடம் தேவர்கள் உள்ளிட்டோர் வரங்கள் கேட்டனர்.
அவர்கள் கேட்ட வரத்தை எல்லாம் வாரி வழங்கியதால் இங்குள்ள பெருமாளுக்கு
வரதர் என்று பெயர் வந்தது. நெருப்பில் தோன்றியதால் உற்சவர் முகம் முழுவதும் நெருப்பு சுட்ட வடு இருக்கும் .அதனால் நெய்வேத்தியத்திற்கு மிளகாய் சேர்ப்பது இல்லை அதற்கு பதிலாக குறுமிளகு ( Pepper) மட்டுமே .
மீண்டும் ஒரு யாகத்தை நடத்திய பிரம்ம தேவர், அத்திமரத்தால் ஆன வரத ராஜ பெருமாளை முன்னிருத்தி யாகத்தை நடத்தினார். அப்போது யாகத்தின் நெருப்பு பெருமாள் சிலையை பாதித்தது. இதனால் செய்வதறியாமல் தவித்த பிரம்ம தேவன், நான் என்ன செய்வது என பெருமாளை வேண்டினார்.
பெருமாளின் யோசனையின் படி, தன்னை குளிர் விக்க கோயிலின் அனந்தசரஸ் குளத்திற்கு நடுவில் உள்ள மண்டபத்தின் அடியில் சயனத்தில் வைக்க கூறினார். பிரம்மனுக்கு பெருமாள் இட்ட கட்டளையின் படி 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்து நீரை வெளியே இறைத்துவிட்டு பெருமாளை வெளியே எடுத்து 48 நாட்கள் சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
கதை -2
செவி வழி கதை
சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் பகைமை இருந்த காலத்தில் அத்தி வரதரை பகைவர்களிடம் இருந்து காப்பதற்காகவும், மண்ணில் குழி தோண்டி அதில் தண்ணீர் நிரப்பி அத்தி வரதரை மறைத்து வைத்து பூஜித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதே போல் மொகலாயர்கள் உள்ளிட்ட அந்நியர்களின் படையெடுப்புகளில் இருந்தும், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொள்ளை போகாமல் தடுப்பதற்காகவும், அத்தி வரதரை மறைத்து வைப்பதற்காகவும் குளத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டார் என்பதும் செவி வழிச்செய்தி.
கதை-3:
வெள்ளைக்காரர்கள் ஆட்சிக் காலத்தில் கோயில் சிலைகள் அனைத்தையும் அவர்கள் நாட்டிற்குக் கடத்திச் சென்ற வேளையில், இந்த ஸ்ரீ அத்தி வரதரையும் நாடு கடத்திவிடுவார்களோ என்று அச்சத்தில் அப்போது இதனை ஆராதித்து வந்தவர்கள் இவரை பூமிக்கடியில் பள்ளம் தோண்டி புதைத்திருந்தனர்.
பிற்பாடு சில காலம் கழிந்து அந்த இடத்தில் பெருமாள் இருப்பது சிலரால் கண்டுபிடிக்கப்பட்டு அவரை அங்கேயே ஆராதித்து வந்தார்கள் என்றும் அவருக்கு அதே இடத்தில் ஒரு மண்டபம் கட்டி, அதில் வைத்து பூஜித்ததாகவும் சொல்லப்படுகிறது.
அந்த மண்டபத்தைச் சுற்றிலும் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கியதால் அதையே ஒரு குளமாக மாற்றி நிரந்தரமாக தண்ணீருக்குள்ளேயே அவரை வைத்துவிட்டதாகவும், 40 வருடத்திற்கு ஒருமுறை அவரை வெளியே எடுத்து ஒரு மண்டல காலத்திற்கு அவரை பூஜித்ததாகவும், பின்னர் அதற்குள் அவரை வைத்துவிட்டதாகவும் ஒரு சிலரால் கூறப்பட்டு வருகிறது.
கதை-4:
இப்போது கோயில் இருக்குமிடம் ஒரு காலத்தில் (பல நூற்றாண்டுகளுக்கு முன்) அத்திமரங்கள் சூழ்ந்த மலையாக இருந்ததாகவும், அப்போது பிரம்மா யாகம் செய்து அந்த யாகத்திலிருந்து இவர் (ஸ்ரீ அத்தி வரதர்) வந்ததாகவும், அதிலிருந்து அவரை பிரம்மா பூஜித்து வந்ததாகவும் ஒருசில காலத்திற்குப் பின்னர் ஸ்ரீ அத்திகிரி வரதர் அர்ச்சகர் கனவில் வந்து தான் பிரம்மாவின் யாக குண்டத்திலிருந்து வந்ததால், தனது உடல் எப்போதும் தகிப்பதாகவும், எனவே தன்னை தினந்தோறும் மூன்று வேளையும் நூற்றுக்கணக்கான குடம் நீர் கொண்டு அபிஷேகம் செய்யும்படியும், அவ்வாறு முடியாமல் போனால் நிரந்தரமாக புஷ்கரணியில் (குளத்து நீரில்) எழுந்தருளச் செய்யும்படியும் ஆணையிட்டதாகவும், அவருக்கு தினந்தோறும் மூன்று வேளையும் நூற்றுக்கணக்கான குடம் நீர் கொண்டு அபிஷேகம் செய்வது கஷ்டமாக இருந்ததால் அவரை குளத்தில் எழுந்தருளச் செய்வது என்று முடிவு செய்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால், அவரை குளத்தில் எழுந்தருளச் செய்துவிட்டால் மூலவருக்கு எங்கு போவது என்று அந்த அர்ச்சகர் கவலைப்படவே, மீண்டும் வரதர் கனவில் வந்து பக்கத்தில் சில மைல் தொலைவில் "பழைய சீவரம்' என்னும் ஊரில் மலைமேல் தன்னைப்போலவே ஒரு பிரதிபிம்பமாக ஒரு வரதர் இருப்பதாகவும் அவரைக் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்து பூஜித்துக் கொள்ளும்படியும், தன்னை 40 வருடங்களுக்கு ஒருமுறை வெளிக்கொண்டுவந்து ஒரு மண்டல காலம் வெளியில் பூஜை செய்து விடும்படியும் ஆணையிட்டதாகவும் அதன்படியே பழைய சீவரத்திற்குச் சென்று பார்த்தபோது அவர்கள் பெருமாள் கூறிய அதே இடத்தில் இவரைப் போலவே ஒரு பிரதிபிம்பமாக இருந்தவரைக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து (தற்போது உள்ள மூலவர்) இவரைத் தண்ணீருக்குள் எழுந்தருளச் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.தற்போதும் வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தினத்தன்று காஞ்சியில் உள்ள வரதராஜப் பெருமாள் காஞ்சியிலிருந்து பழைய சீவரத்திற்கு பார்வேட்டை உற்சவமாக சென்று வருவது இதன் அடிப்படையில்தான் என்று கூறப்படுகிறது.
கதைகள் பலவாக இருந்தாலும் அத்திவரதர் நிஜம் அவர் நமக்கு காட்சி கொடுக்க தயாராகிக்கொண்டு இருந்தார் .நாங்கள் அவரை பார்க்க தயார் ஆனோம் மனதளவில் .சரி அத்திவரதரை பாக்க போலாமா ?
அந்த நாள் முழுவதும் தொலைக்காட்சிகளில் அத்திவரதர் செய்திதான் தலைப்பு செய்தி .என் மனைவியும் அந்த காட்சியை தொலைக்காட்சில் பார்த்தேன் என்றாள் . அத்திவரதரை பார்க்க போலாமா ? என்று கேட்டாள்.
சரி போலாம் என்றேன். ஆனால் அவர் நமக்கு appointment குடுக்கணுமே என்றேன் .என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அவரை பார்க்க வேண்டும் என எண்ணம் .அவர்களும் போன தடவை இதை பத்தி தெரியல இந்த அளவு தகவல் தொடர்பும் இல்லை அப்படியே தெரிந்தாலும் போக வாய்ப்பே இல்லை . அப்போது இருந்த சூழல் அப்படி மேலும் இருவருக்கும் திருமணமாகவில்லை .😀( அம்மா அப்பா திருமணம் 1980ல் ).அதனால் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருவருக்கும் .எங்களுக்கு 40 வருஷம் கழிச்சு இருப்பமோ இல்லையோ தெரியல அதனால கண்டிப்பா பாக்கணும் இப்போது உடம்புல வலு இருக்குறது அதனால இப்பவே பார்த்து விட வேண்டும்.
அன்று மாலை என் மகளும்(அவளுக்கு வயது ஐந்து ) இதை கவனித்து இருப்பாள் போல , நான் தொலைக்காட்சி யில் பார்த்துக்கொண்டு இருந் தேன் ( மீண்டும் மீண்டும் )அவளும் அவள் பங்கிற்கு யாருப்பா அது உடம்பு சரி இல்லையா ? ஏன் எல்லாரும் அவரை அப்படி தூக்கிகிட்டு போறாங்க என்றாள் அது சாமி டா .. என்றேன் .ஓ சாமிக்கு உடம்பு சரி இல்லையோ ? இல்லை என்றேன் நான் .சரி என்னதான் அப்பா ஆச்சு சாமிக்கு என்றாள் . அவளுக்கு சொன்னேன் ஒன்றும் ஆகவில்லை ,அந்த சாமி பெயர் அத்திவரதர் .
அவளும் முதல்முறையாக அந்த பெயரை கேட்டிருப்பாள்.அவளுக்கும் ஆச்சரியம் ..அவளுக்கும் கதையை சொன்னேன் ஓகோ அப்படியா என அவள் மொழியில் சொன்னாள் . அவளும் நிறைய கேள்வி கேட்டாள் .நானும் பதில் சொன்னேன் அவள் கேக்கும் கேள்விக்கெல்லாம் .அவள் கேட்ட கேள்விகள் எல்லாம் நான் என் நண்பனிடம் 20 ஆண்டுகளுக்கு முன் கேட்ட அதே கேள்விகள் ,இதுவெல்லாம் யார் அவளுக்கு சொன்னது ? யார் கேக்க சொன்னது ,எல்லாம் ஒரு பிணைப்பு தான் என நினைத்தேன் .
சரி எப்படி போய் பார்க்கலாம் என நினைக்கும் போது இணைய வழி முன்பதிவு (online)செய்யலாம் என அறிவித்து இருந்தது தமிழக அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் ஒரு நாளைக்கு 500 பேர்தான் அனுமதிக்க படுவதாக அறிக்கை வந்தது .அதுவும் காலையில் 250 மாலையில் 250 என அறிவித்து இருந்தார்கள் .அப்பறம் 50 ரூபாய்க்கு மற்றும் இலவச தரிசனம் என அறிவிக்கப்பட்டுயிருந்தது சரி எப்படியும் பார்க்கலாம் என் முடிவு கொண்டேன்.இரு நாள்களாக தொலைக்காட்சி , முகநூல் என அவர் பேசுச்சுதான் .(எங்கள் வீடு உட்பட )
சரி அவர் கதையும் கொஞ்சம் கேட்க வாருங்கள் (இந்த கதைகள் /வரலாறு எல்லாம் இணையம்,புத்தகத்தில் படித்தது .)
கதை -1
புராண கதை:ஸ்ரீரங்கம், திருப்பதி ஆகியவற்றிற்கெல்லாம் முந்தைய மிகப் பழமையான வரலாறு கொண்டது காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் வரலாறு.
ஆதியில் படைப்பு தொழில் மேற்கொண்ட பிரம்ம தேவன் தனது காரியங்கள் செவ்வனே நடைப்பெற ஒரு யாகம் மேற்கொண்டார். யாகத்திற்கு சரஸ்வதி தேவியை அழைக்காததால், மனைவி இல்லாமல் யாகத்தை பூர்த்தி செய்ய முடியாது என்பதால் காயத்திரி, சாவித்திரியை வைத்து யாகத்தை முடிக்க எண்ணினார். தன்னை அழைக்காமல் யாகம் செய்த பிரம்மர் தேவர் மீது கோபம் கொண்ட சரஸ்வதி தேவி, பிரம்மனின் யாகத்தை அழிக்க வேகவதி ஆறாக உருமாறி யாகத்தை நோக்கி வந்தாள்.அந்த ஆறு என்றும் ஓடுவதாக சொல்லுகிறீர்கள் ( அப்படியா ?)
பிரம்ம தேவனின் யாகத்தை காப்பாற்றும் பொருட்டு பெருமாள், சயனம் கொண்டு நதியை தடுத்து பிரம்மனின் யாகத்தை காப்பாற்றினார். சித்திரை மாதம், திருவோண நட்சத்திரத்தில், பிரம்மன், தேவர்களுக்கு புண்ணியகோடி கோலத்தில் அதாவது சங்கு, சக்கரம், கதை தாங்கிய கோலத்தில் பெருமாள் காட்சி அளித்ததார். அப்படி புண்ணியகோடி கோலத்தில் காட்சி அளித்த வரதராஜ பெருமாளை பிரம்ம தேவர் அத்தி மரத்தில் வடித்து வழிபட்டார்.
புண்ணிய கோடி விமானம்
புண்ணிய கோடி விமானமும் கோவில் கோபுரமும்
மீண்டும் ஒரு யாகத்தை நடத்திய பிரம்ம தேவர், அத்திமரத்தால் ஆன வரத ராஜ பெருமாளை முன்னிருத்தி யாகத்தை நடத்தினார். அப்போது யாகத்தின் நெருப்பு பெருமாள் சிலையை பாதித்தது. இதனால் செய்வதறியாமல் தவித்த பிரம்ம தேவன், நான் என்ன செய்வது என பெருமாளை வேண்டினார்.
பெருமாளின் யோசனையின் படி, தன்னை குளிர் விக்க கோயிலின் அனந்தசரஸ் குளத்திற்கு நடுவில் உள்ள மண்டபத்தின் அடியில் சயனத்தில் வைக்க கூறினார். பிரம்மனுக்கு பெருமாள் இட்ட கட்டளையின் படி 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்து நீரை வெளியே இறைத்துவிட்டு பெருமாளை வெளியே எடுத்து 48 நாட்கள் சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
கதை -2
செவி வழி கதை
சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் பகைமை இருந்த காலத்தில் அத்தி வரதரை பகைவர்களிடம் இருந்து காப்பதற்காகவும், மண்ணில் குழி தோண்டி அதில் தண்ணீர் நிரப்பி அத்தி வரதரை மறைத்து வைத்து பூஜித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதே போல் மொகலாயர்கள் உள்ளிட்ட அந்நியர்களின் படையெடுப்புகளில் இருந்தும், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொள்ளை போகாமல் தடுப்பதற்காகவும், அத்தி வரதரை மறைத்து வைப்பதற்காகவும் குளத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டார் என்பதும் செவி வழிச்செய்தி.
கதை-3:
வெள்ளைக்காரர்கள் ஆட்சிக் காலத்தில் கோயில் சிலைகள் அனைத்தையும் அவர்கள் நாட்டிற்குக் கடத்திச் சென்ற வேளையில், இந்த ஸ்ரீ அத்தி வரதரையும் நாடு கடத்திவிடுவார்களோ என்று அச்சத்தில் அப்போது இதனை ஆராதித்து வந்தவர்கள் இவரை பூமிக்கடியில் பள்ளம் தோண்டி புதைத்திருந்தனர்.
பிற்பாடு சில காலம் கழிந்து அந்த இடத்தில் பெருமாள் இருப்பது சிலரால் கண்டுபிடிக்கப்பட்டு அவரை அங்கேயே ஆராதித்து வந்தார்கள் என்றும் அவருக்கு அதே இடத்தில் ஒரு மண்டபம் கட்டி, அதில் வைத்து பூஜித்ததாகவும் சொல்லப்படுகிறது.
அந்த மண்டபத்தைச் சுற்றிலும் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கியதால் அதையே ஒரு குளமாக மாற்றி நிரந்தரமாக தண்ணீருக்குள்ளேயே அவரை வைத்துவிட்டதாகவும், 40 வருடத்திற்கு ஒருமுறை அவரை வெளியே எடுத்து ஒரு மண்டல காலத்திற்கு அவரை பூஜித்ததாகவும், பின்னர் அதற்குள் அவரை வைத்துவிட்டதாகவும் ஒரு சிலரால் கூறப்பட்டு வருகிறது.
கதை-4:
இப்போது கோயில் இருக்குமிடம் ஒரு காலத்தில் (பல நூற்றாண்டுகளுக்கு முன்) அத்திமரங்கள் சூழ்ந்த மலையாக இருந்ததாகவும், அப்போது பிரம்மா யாகம் செய்து அந்த யாகத்திலிருந்து இவர் (ஸ்ரீ அத்தி வரதர்) வந்ததாகவும், அதிலிருந்து அவரை பிரம்மா பூஜித்து வந்ததாகவும் ஒருசில காலத்திற்குப் பின்னர் ஸ்ரீ அத்திகிரி வரதர் அர்ச்சகர் கனவில் வந்து தான் பிரம்மாவின் யாக குண்டத்திலிருந்து வந்ததால், தனது உடல் எப்போதும் தகிப்பதாகவும், எனவே தன்னை தினந்தோறும் மூன்று வேளையும் நூற்றுக்கணக்கான குடம் நீர் கொண்டு அபிஷேகம் செய்யும்படியும், அவ்வாறு முடியாமல் போனால் நிரந்தரமாக புஷ்கரணியில் (குளத்து நீரில்) எழுந்தருளச் செய்யும்படியும் ஆணையிட்டதாகவும், அவருக்கு தினந்தோறும் மூன்று வேளையும் நூற்றுக்கணக்கான குடம் நீர் கொண்டு அபிஷேகம் செய்வது கஷ்டமாக இருந்ததால் அவரை குளத்தில் எழுந்தருளச் செய்வது என்று முடிவு செய்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால், அவரை குளத்தில் எழுந்தருளச் செய்துவிட்டால் மூலவருக்கு எங்கு போவது என்று அந்த அர்ச்சகர் கவலைப்படவே, மீண்டும் வரதர் கனவில் வந்து பக்கத்தில் சில மைல் தொலைவில் "பழைய சீவரம்' என்னும் ஊரில் மலைமேல் தன்னைப்போலவே ஒரு பிரதிபிம்பமாக ஒரு வரதர் இருப்பதாகவும் அவரைக் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்து பூஜித்துக் கொள்ளும்படியும், தன்னை 40 வருடங்களுக்கு ஒருமுறை வெளிக்கொண்டுவந்து ஒரு மண்டல காலம் வெளியில் பூஜை செய்து விடும்படியும் ஆணையிட்டதாகவும் அதன்படியே பழைய சீவரத்திற்குச் சென்று பார்த்தபோது அவர்கள் பெருமாள் கூறிய அதே இடத்தில் இவரைப் போலவே ஒரு பிரதிபிம்பமாக இருந்தவரைக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து (தற்போது உள்ள மூலவர்) இவரைத் தண்ணீருக்குள் எழுந்தருளச் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.தற்போதும் வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தினத்தன்று காஞ்சியில் உள்ள வரதராஜப் பெருமாள் காஞ்சியிலிருந்து பழைய சீவரத்திற்கு பார்வேட்டை உற்சவமாக சென்று வருவது இதன் அடிப்படையில்தான் என்று கூறப்படுகிறது.
பழைய சீவரம் கோவில் ( மலை கோவில்)
பார் வேட்டை திருவிழா
கதைகள் பலவாக இருந்தாலும் அத்திவரதர் நிஜம் அவர் நமக்கு காட்சி கொடுக்க தயாராகிக்கொண்டு இருந்தார் .நாங்கள் அவரை பார்க்க தயார் ஆனோம் மனதளவில் .சரி அத்திவரதரை பாக்க போலாமா ?
(தொடரும் -4)

No comments:
Post a Comment