Saturday, March 28, 2020

அத்திவரதருடன் ஒரு ஆனந்த அனுவபம்-9



நண்பனின் உறவினர் வீட்டுக்கு  சென்று விட்டு சற்று  சிரம பரிகாரம் செய்துவிட்டு .ஒரு பார்சல் கொடுத்தான்.சரி என்ன வென்று பார்த்தால் எங்களுக்கான இரவு உணவு .எங்களுக்கு ஒரு மாதிரி போய்விட்டது  ஏனெனில் எங்களுக்கு ஒரே பசி ..எங்கள்  பசியறிந்து  கொண்டுவந்து இருப்பதுபோல் இருந்தது .எனக்கு பிரசாதம்  போல்  இருந்தது .அந்த அத்தி வரதரை பார்த்துவிட்டு பசியோடு போனால் எப்படி அதான் அந்த வரதர் எங்களுக்கு கொடுத்து அனுப்பினார் போல.


என் நண்பனிடம் விடை பெற்று கொண்டு விட்டு காரில்  புறப்பட தயார் ஆனோம் .அப்போதுதான்  மழை விட்டு இருந்தது .ஊரைவிட்டு வெளியே வர 10 நிமிடம் ஆனது .அந்த ஓட்டுனரும் ரொம்ப சந்தோசம் இதுவரை 10 நிமிஷத்தில் வெளியே வந்தது இல்லை  என்றார்.எங்களுக்கும்  சந்தோஷம் . ஆனால்  எங்களுக்கு 10 நிமிடம் கூட  நீடிக்கவில்லை .டிரைவர் கூட ரொம்ப கஷ்டபட்டரர் என்றே சொல்லாம் .1 மணி நேரமா ஒரே இடத்தில்  இருந்தோம் .அவரும் எங்கோ சுத்தி கொண்டு இருந்தார் .உண்மையிலே  செய்தாரா அல்லது வேண்டும் என்று செய்தாரா  எண்டு அந்த வரதருக்கு  தான் வெளிச்சம் . பழைய சீவரம்  வந்தவுடன் தான்  உயிரே வந்தது .வீட்டிற்கு வரும் போது  மணி 11:00.என்  நண்பன் கொடுத்த  இட்லி  மன்னிக்கவும் பிரசாதம் (வரதர் கோவில் பிரசாதம் கோவில் இட்லி  தானே சாப்பிட்டு விட்டு படுக்க  சரியாய் இருந்தது .அன்று  இருத்து ஒரு திருப்தி என் 36 ஆண்டு ஜென்ம பலன் முடித்ததாக நினைத்தேன் .

என் நண்பனுக்கு தொடர்பு கொண்டு விவரத்தை  சொன்னேன் .அவன் கண்டிப்பா அடுத்த முறை வரும் போது வரவேண்டும்  எண்டு கண்டிப்பா  சொன்னான் நானும் சரி என்று சொன்னேன் .சரி நாங்களும் கோவை கிளம்பினோம் அவர் நினைவோடு .இங்கு வந்தவுடன் அவரை பற்றித்தான் விசாரிப்பு ..தொலை க் காட்சி யில் அத்தி வரதர் பற்றி செய்தி வரும் போது என் மகள் அப்பா அப்பா அத்தி வரதர் என்ற குரல் ஒலிக்கும்  அவளிடம்  இருந்து .

நாள் நெருங்க நெருங்க அவரை உள்ளே வைக்க ஏற்பாடு ஆரம்பமாது .ஒருசாரர் அவரை 108 நாள் அல்லது  நிரந்தர மாக வெளியே வைக்கலாம் என்ற கோரிக்கை எழுந்தது .ஆனால் அரசு அது முடியாது என  மறுத்து விட்டது .அவர் இருக்க போகும் அறை ,நாகம்  அந்த அறையில்  இருத்த கல்வெட்டும்(1937,1979)எல்லோருக்கும்  தொலை க் காட்சி யில்காட்ட பட்டது. கல்வெட்டும் (2019)வைக்க போகவதாகவும் சொன்னார்கள் .2059 இல் அந்த கல்வெட்டுகளையும் நாம் காணலாம் .


அவர்  அறை 

நாகம் 
அந்த அறையில்  இருத்த கல்வெட்டுகள்

                                                                      1937

 
                                                                        
                                                                         1979

கடைசி நாள் 17/08/2019 அன்று பக்தர்களை யாரையும் அனுமதிக்கவில்லை அன்று அவருக்கு உண்டான பூஜைமட்டும் அதிகாலை முதல் நடந்தது .மேலும் அவர்  மேனி 40ஆண்டு காலம் பாதிக்காமல் இருக்க 40 மூலிகை  சேர்த்த தைலக்காப்பு சாத்தப்படாதாம் . அன்று மாலையில் உற்சவர் மூலவருடன் இருக்கும் சேர்த்தி சேவை நடை பெற்றது .அதை  பாருங்கள் 




அவருக்கு கடைசியாக  தீபாராதனை காட்டப்பட்டது .தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது .அந்த காட்சிகள் இதோ 



அன்று இரவு தொலைக்காட்சியில்இதை பற்றி நேரலை ஒளிபரப்பானது யாருக்கும் அனுமதி கிடையாது என்பதால் உள்ளே நடப்பது வெளியே தெரிய வில்லை ஆனால் மறுநாள் சிறு வீடியோ வந்தது .

https://www.youtube.com/watch?v=OVkRz-hwfMw 

அதை பார்க்கும் போது  எனக்கு  நம் குடும்பத்தில்  ஒருவர் வெளிநாட்டில் இருந்து வந்து மீண்டும் வெளிநாடு செல்ல விமான நிலையத்தில் இருத்து கடைசியாக நமக்கு பிரியாவிடை கொடுக்கும் போது வரும் உணர்வு வந்தது ஆம் ...நம் குடும்பத்தில் ஒருவர் தானே அவர். 


 கடைசி தீபாராதனை 


 அவர் அறையில் 

அவரை உள்ளே வைத்தவுடன்  காஞ்சிபுரத்தில் நல்ல மழை பெய்ததாம் .ஒரு 10 நாள்களாக மழை பேய்தது .அடுத்த வந்த இரண்டு மாதங்களில் தமிழகம் முதுவதும் நல்ல மழை .அவர் வருவதற்க்கு முன்னால் நல்ல தண்ணீர் பஞ்சம் அவர் வந்தவுடன் அந்த தண்ணீர் பஞ்சம் தீர்ந்தது .உண்மையிலே அதிசயம் தான் அவரும் அந்தஸரஸ் குளம் நிரம்பியது அதுவும்  மூன்றே மாதங்களில் .

 5 மாதத்திற்கு  பிறகு 




 உண்மையே அவரை பார்த்தது  எனக்கு ஆனந்த அனுவபம்..அந்த அனுபவம் கிடைக்க இன்னும் 39 ஆண்டுகள் காத்திருப்போம் ...அந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைக்க அந்த வரதர் அருள் புரிவர் என் நினைக்குறேன் .நன்றி ..

(தொடரும்-9)

 குறிப்பு :அடுத்த பதிவு ஒரு புகைப்பட தொகுப்பு ..


No comments: