Wednesday, January 1, 2020

அத்திவரதருடன் ஒரு ஆனந்த அனுவபம்-8

வரிசையில் நிற்க ஆரம்பித்துடன் மழை மேலும் மேலும் அடிக்க ஆரம்பித்தது .நாங்களும் மழை யில் நனைந்தபடி மெதுவாக சென்று  கொண்டு இருந்தோம் .அந்த தெரு முதுவதும் ஒரே தண்ணீர் ஓடி கொண்டு இருந்தது .அது மழை நீரா இல்லை சாக்கடை நீரா என்பது தெரியவில்லை .வரிசை இரும்பு கம்பிகளில் அமைக்க பட்டு இருந்தது .அங்கு உள்ள மக்கள் அனைவரும் சந்தோஷமாக வரிசையில் பேசிக்கொண்டு சென்றார்கள் ,நாங்களும்தான் .கோவிலுக்கு மிகஅருகில் வந்தோம் அப்போது கூட்டத்தில் இருந்து ஒரு குரல் கம்பிலயில் ஷாக் அடிக்குது என்றார் யாரும் தொடாதிங்க என்றார் எல்லருக்கும் ஒரே படபடப்பு மழை வேற பெய்கிறது .ஷாக் அடித்தால் என்ன ஆவது .எலெக்ட்ரிசியன் வந்தார் செக் பண்ணி பார்த்துவிட்டு ,பிரச்சனை ஒன்னும் இல்லயே னு போய் விட்டார் .அப்பாடா என்றார்கள் ஆனாலும்  ஒரு பயம்.


வசந்த மண்டம்  முன் 

வசந்த மண்டம்  முன் இருந்த கூட்டம்

  வரிசையில் ங்கள் மெதுவாக நகர்ந்து மேற்கு கோபுரம்  வழியாக  உள்ளே நுழைந்து கொண்டு இருந்தோம் .எங்கள் எதிரே  மக்கள் கூட்டம் வந்துகொண்டு இருந்தது .அதையும்  பார்த்துக்கொண்டு மெதுவாக வசந்த மண்டபத்தை அடைந்தோம் .எங்கும்  கோவிந்தா  கோவிந்தா  என்று  ஒலித்தது .

 அன்றைய அலங்காரம் 

மண்டபத்தின்  இட புறவாசல் வழியாக எங்கள் வரிசை போய் கொண்டு இருந்தது .நானும் அந்த வழியாக வரதரின் முகம் தெரிந்தது .என் மகளிடம் அதோபார் சாமி தெரிகிறது என்றேன் .அவளும் ஆமா தெரிகிறது என்றாள் .அந்த வாசலை நெருங்கிவிட்டோம் .அப்போது ஒரு பெண்மணி ஒரு தட்டு நிறைய உலர் பழங்கள் தந்தார் .பெருமாளுக்கு  வைத்தது .என்றார்  எங்கள் கண்ணீர் வராத குறை ,ஆனந்த கண்ணீர் தான் .இதோ பெருமாளை கண்டுவிட்டோம் .

 அன்றைய அலங்காரம்

அந்த  அனுபவத்தை  என்ன வென்று  சொல்லுவது  ஆனந்த அனுபவம் அவரை  உச்சி  முதல் பாதம் வரை கண் குளிர தரிசித்தேன் .என்ன ஒரு இரண்டு  நிமிடம்தான் .போதும் போதும் போபா   என்ற போலீஸ் குரல் தான்  உள்ளே  ஒலித்தது .என்  மகளும் சாமி  நல்லா  இருக்கு அப்பா .அழகாவும் இருக்கு அப்பா . நாங்களும்  சாமியை பார்த்த சந்தோசத்தில் வெளியே வந்தோம் .


 தரிசனம் கண்ட மகிழ்ச்சி 

அப்போ என் மகளிடம் "நீ அடுத்த முறை  அத்தி வரதரை பார்க்க வரும் போது நீ உன் கணவர் மட்டும் உன் பிள்ளைகளுடன் வா  என்றேன் .அவளும்  இல்லை நான் டாக்டர் ஆகி வருவேன் என்றாள் "சரி மா  என்றேன் .

இன்னும் ஒருமுறை பார்க்கலாம் போல இருந்தது ஆனால் கூட்டத்தை பார்க்கும் போதும் .பார்த்தது போதும் சாமி  என்று இருந்தது .சரி இனி அடுத்து பார்க்க முடியுமோ இல்லையோ  என்ற ஏக்கம் வேறு .அதே நினைவுடன் வெளியே வந்தோம் .வரும் போது மணி இரவு 9.

வெளியே வரும் போது

 வெளியே வந்த பிறகு



  வெளியே வந்த பிறகு

வெளியே வந்து அத்தி வரதர் போட்டோ  வாங்கிக்கொண்டு எங்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தோம்  இரவு 9 மணி அப்போது ஒரு நினைவு வந்தது நாங்கள்  யாரும் சாப்பிடவில்லை ,பசி  என்று நினைவு  வரவில்லை .சரி ஒரு டீயாவது குடிப்போம் என்றும் கடையை தேடினால் ஒரு கடையில்  கூட இல்லை .ஒரு கடை இருந்தது பால் மட்டும் தான் அதுவும் 5 பால் தான் இருந்தது .வாங்கி குடித்தோம் வரதரின் கருணையால் , ..பால்  குடித்தவுடன் சிறிது அடங்கியது .சாப்பிடலாம் என்றால் ஹோட்டல்  வேறு இல்லை என்னடா பண்றது பசி வேறு..அப்போது என் நண்பனிடம் இருந்து அழைப்பு வந்தது .இதற்கு முன் 5 முறை பண்ணி இருக்கான் சத்தத்தில் கேக்க வில்லை .சரி தரிசனம் முடிச்சாச்சா ?.வீட்டுக்கு  வாங்க என்றான் .மழை நனைந்து இருந்ததால் அவன் வீட்டுக்கு செல்ல முடியாத நிலை .நிலையை  சொன்னேன் .


சரி உறவினர் வீட்டுக்கு  வா  என்றான் நான் சரி என்றேன் .நாங்களும் அவன் உறவினர் வீட்டு நோக்கி சென்றோம் .அவன் எங்களுக்கு காத்து கொண்டு இருந்தான் .

(தொடரும்-8)




குறிப்பு :வருடத்து முதல் பதிவு வரதருடன் ஆரம்பிக்கிறேன்
 

1 comment:

துளசி கோபால் said...

அருமை. நீங்க அங்கே குடும்பத்துடன் போய் சேவித்தது நல்லது! மறக்க முடியாத அனுபவம், இல்லையோ!!!