Thursday, November 14, 2019

அத்திவரதருடன் ஒரு ஆனந்த அனுவபம் -6

ஆகஸ்ட் 01 முதல் நின்ற கோலத்தில் தரிசனம் தொடங்கியது அதன் நேரலை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு தொடங்கியது அந்த  காட்சியும்  பிரமிப்புதான் ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி என்ற  ஆண்டாள் பாசுரத் திற்கு இணங்க  உண்மையிலே ஓங்கி தான்  இருந்தார் . சயன கோலத்தை விட கம்பீரமாக இருந்தார் .


நின்ற கோலம்


நின்ற கோலம் -ஆரத்தி

அத்திவரதரை  பார்க்கும் போது அந்த மூலவர் இங்கு வந்து விட்டார் என நினைத்தேன் இருவருக்கும் அவ்வளவு ஒற்றுமை .அவர் கரத்தில் இருத்த அதே மா சு  ச,  மூலவர் அணிந்த கிரீடம் ,திருமண் ,சங்கு ,சக்கரம்,கதை, அவர் திருவடி   என அதே அளவு  என்ன ஒரு ஒற்றுமை அளவு எடுத்த மாதிரி இருத்தது . நீங்களும்  பாருங்கள்.

               மூலவர்                                                                               அத்திவரதர் 


















 மூலவர்                                                                       அத்தி வரதர் 
 

அத்தியூரான் புள்ளை யூர்வான், அணிமணியின்
துத்திசேர் நாகத்தின்மேல் துயில்வான்--முத்தீ
மறையாவான் மாகடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான்

என்ற பூதத்தாழ்வார் பாசுரம் தான்  நினைவுக்கு வந்தது .ராமானுஜருக்கு அருளிய பெருமான் இவர்தானோ ? திருக்கச்சிநம்பி உடன் பேசிய பெருமான் இவர்தானோ ? இருக்கலாம் எனக்கு  அப்படித்தான்  தோன்றியது.

இதற்கு இடையில் ஆடிப்பூர விழாவும்  சேர்ந்து  கொண்டது என்ன ஒரு பொருத்தம் பாருங்கள் அந்த ஆண்டாளுக்கும்  தரிசனம் கொடுத்து இருப்பார் அந்த அத்தி வரதர் .கூடவே  பெரியாழ்வார்வரும் வந்து இருப்பார் தன் மகளின் திருமணத்திற்காக.

ஆண்டாள் -வரதர் 



 

 ஆண்டாள்                                                                          பெரியாழ்வார் 


பயணத்திற்கு போய்வர டிக்கெட்களில்   வருவதற்கு(Return )  டிக்கெட்  உறுதி ஆகியிருந்தது (Confirm).போவதற்கு டிக்கெட் காத்திருப்பு பட்டியலில் இருந்தது.( இது  என்ன அடுத்த சோதனை ....). சரி இருக்கவே இருக்கு  தட்கல் .ஆனாலுமோரு சிக்கல் ரெண்டும் ஒரு நாள்  மணி தான் வேற online  booking  10 மணிக்கு,  தட்கல் 11 மணிக்கு சரி   ஒரு கை பாத்துடலாம்.இதில் ரெண்டு நாளா  வலைத்தளம்(https://tnhrce.gov.in) வேறுவேலை செய்யவில்லை(Site Down ).
அந்த  நாளும் வந்தது(ஆகஸ்ட் 02) .அத்திவரதரை ஒரு கும்பிடு  போட்டுவிட்டு வலைத்தளம்  உள்ளே போனேன் .அப்பாடா  வேலை செய்தது . 10 மணி ஆன உடன்  எனது தகவல்களை பதிவு செய்து  உள்ளே  போனேன்  button னை click  செய்தல் மேல போக முடியவில்லை ( என்னடா இது  சோதனை ) ரொம்ப நேரம் முயற்சி செய்தும் முடியவில்லை . டிக்கெட்டும் காலி ஆகி கொண்டு இருத்தது .நேரம் ஆக ஆக தட்கல் நேரமும்  நெருங்கியது .சரி  முதலில் ரயில் டிக்கெட் போடுவோம் அப்பறம் பாக்கலாம் .தரிசன டிக்கெட் கிடைக்கவில்லை  என்றாலும்  இலவச தரிசனம் போய் பாக்கலாம் நானும் என் மனைவியும்  என்  மகளை தம்பி வீட்டில் விட்டுவிட்டு (அவள் கொடுத்துவச்சது அவ்வளவுதான் ,அடுத்தமுறை பார்ப்பாள் என்ற நம்பிகையுடன் )

சரி தட்கல் முயற்சி  செய்வோம் .என்ன  ஒரு அதிசயம் இன்று  போட்டவுடன் டிக்கெட் கிடைத்துவிட்டது என்னால் நம்ப  முடியவில்லை .ஆனாலும் தரிசனத்துக்கு  டிக்கெட் கிடைக்கல .சரி 300 ரூபாய் முயற்ச்சி செய்துபார்ப்போம்  என முயற்சி செய்தேன் முதல் முறை  தோல்வி ,மூன்றாம் முறைதான் கிடைத்தது . சந்தோசம் தான்.என்ன  எல்லாம் முடிக்க ஒரு 11:30 மணி ஆகிவிட்டது . என் மனைவி, அம்மா , தம்பி  என அனைவரிடம் சொன்னேன் .எல்லாரும்  சந்தோஷபட்டார்கள் .என் மகள் அதிஷ்டசாலிதான் அடுத்தமுறையும்(2059) அத்தி வரதரை பார்ப்பாள்.


 எங்க டிக்கெட் 

என் நண்பனிடம்  தகவல் சொன்னேன் மிக்க சந்தோஷம் என்றான் எங்கள் பயண விபரங்களை கேட்டு கொண்டான்.சாமியை பார்த்து விட்டாயா ? என்று கேட்டேன் . அவன் கூட்டம் கம்மியா இருக்கும்  போதெல்லாம் போய் பார்த்துவிட்டு வருவேன் என்றான் .இதுவரை ஒரு 7 முறை பார்த்து இருப்பேன் என்றான் மேலும் அலுவலகம்  செல்லவில்லயா ? என்றேன் .போனவரை கொஞ்சம் கடினமாக இருக்கு அதன் ஒரு 48 நாள் விடுமுறை எடுத்துவிட்டேன் என்றான் .எனக்கு ஒரே ஆச்சிரியம் தான் ,சரி காஞ்சிபுரம் வந்துவிடு பார்க்கலாம் என்றான் .

எங்கள் அலுவலகத்தில்  என் மேலாளரிடம் சொன்னேன் சரி போய்டுவா என்றார் .ஆனால் அவர் அத்தி வரதரை ஏற்கனவே பார்த்துவிட்டு வந்து இருந்தார் ,நானும் அவரும் ஒரே கல்லூரி யில் தான் படித்து இருந்தோம் எனக்கு அவர் ரொம்ப சீனியர் .நான் கல்லூரி யில்  சேரும் பொது அவர் படித்து முடித்து வெளியே வந்துவிட்டார் .அதனால் அவரை பார்த்து இல்லை இங்கு வந்துதான் தெரிந்து கொண்டேன் .அதற்குள் என் அலுவலக நண்பர்களிடம் இந்த தகவல் பரவியது .

நாங்களும் பயணத்திற்கு தயார் ஆனோம் தேவையான  பொருட்களுடன் (ஆதார் ,உடைகள் ) சென்னை  நோக்கி  பயணமானோம் . என் மகளுக்கு ஒரே சந்தோஷம்  அவள் தாத்தா பாட்டி , சித்தப்பா , சித்தி ,தம்பி  மற்றும்  அத்தி வரதரை பார்க்க போறோம்  என்று . எங்களுக்கும் தான் . ரயில் ஏறி  சென்னை நோக்கி பயணமானோம் .

 ரயில் பயணத்தில்  நாங்கள் 

சரி அடுத்த பதிவில் காஞ்சிபுரம் பயண அனுபவம் பற்றி சொல்கிறேன் .

                                                                                                                 (தொடரும் -6)







No comments: