Wednesday, September 25, 2019

அத்திவரதருடன் ஒரு ஆனந்த அனுவபம் -2

அத்திவரதருடன் ஒரு ஆனந்த  அனுவபம் -2

கல்லூரி பருவம்  முடிந்தவுடன்   மேற் படிப்பு மற்றும் ,வேலை தேடி வேற ஊர் ,வேற மாநிலம் சென்றேன். வேலை ,திருமணம் ,குழந்தை, சொந்த வீடு   என அடுத்த அடுத்த நிலைக்கு சென்றேன் ஆனாலும்  இப்பொழுதும் என்  நண்பனுக்கும்  உண்டான நட்பு  அந்த ஊர்கும் உண்டான பந்தம் இன்றும்  தொடர்கிறது .எப்போதெல்லாம் அங்க செல்ல முடியுதோ அப்போவெல்லாம்  கோவிலுக்கும் என் நண்பன் வீட்டுக்கும் கண்டிப்பாக  செல்வேன் . அப்போவெல்லாம் அத்திவரதரை  பற்றியும் அந்த குளத்தங்கரை உரையாடலும் எப்போதும் நடக்கும் .மற்ற நாள்களில்  அதை  பற்றிய  நினைவு ஓடும் .

சென்ற வருடம்  டிசம்பர்  மாதம்  You Tube ல்  ஒரு வீடியோ  வந்தது  அதில் அடுத்த ஆண்டு(2019)  ஜூலை  மாதம்  ஆதிவரதர்  எடுத்தருள  போகிறார்  என்ற  தகவல் வந்தது . எனக்கு ஒரே  ஆனந்தம் . என்  நண்பனிடம்  கேட்டு உறுதி செய்தேன் . அத்திவரதரை  பார்க்க வேண்டும் என்ற  ஆசை .

நாள்கள் செல்ல  எப்போது அத்தி வரதர் வருவார் என்ற ஆர்வம் அதிகரித்தது .பத்திரிகை , முகநூல் ,தொலைக்காட்சி  என  அனைத்திலும் செய்தி  வர ஆரம்பித்தது .கோவில் நிர்வாகம் சார்பாக  அறிக்கை வெளியிடப்பட்டது  ஜூலை 1 ம் தேதி  முதல்  ஆகஸ்ட்  17 வரை தரிசனம்  தருவார் என அறிவிக்கப்பட்டது .

இணையத்தில் தேடியபோது பழைய படம் கிடைத்தது .கருப்பு  வெள்ளை படத்திலும் அத்திவரதர்  மிக அழகாக  தெரிந்தார் எனக்கு .




சரி ..அவரை  கண்டிப்பா போய் பாக்கணும் என்று  நினைத்தேன்    என் மனைவிடம் சொன்னேன்.சரி  என்றாள் ஒரு திட்டம் (Plan) போடுங்க  என்றாள் .
என் அம்மாவும் கண்டிப்பா போய் பார்க்கணும்பா  என்றார்கள் .சரி  எப்போ போகலாம்னு பார்த்தால் அலுவலகம் , இடையில்  உறவினர் திருமணம் வேறு எப்ப்டி பாக்கபோறோம் ஒரு கவலை .......... சரி  ஆண்டவன்  விட வழி  என  இருந்தேன் ..

                                                                                                                                     (தொடரும் -2)

3 comments:

மாதேவி said...

வாருங்கள் நல்வரவு.
உங்கள் பகிர்வு கண்டு கொண்டேன்.
தப்பாக நினைக்க வேண்டாம் இன்னும் பதிவை விரிவாக, படங்களையும் இணைத்து தரலாம் என்பது எனது கருத்து.மற்றவர்கள் கருத்துக்களையும் அறிந்து கொள்ளுங்கள்.

செந்தில்பிரசாத் said...

கண்டிப்பாக இனிவரும் பதிவுகளில் பாருங்கள்

நன்றி

துளசி கோபால் said...

எனக்கும் அத்திவரதர் தரிசனம் இந்தப் பிறவியில் லபிக்கவில்லை. நேரா வரச் சொல்லிட்டான் !!!!

மாதேவி சொன்னது சரி. இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதுங்கள். நாலு வரி நாலுவரின்னா பதிவுகள் எண்ணிக்கை அதிகமாகுமே தவிர.... படித்த திருப்தி இருக்காது.